ஞாயிறு, 27 டிசம்பர், 2009
சனி, 26 டிசம்பர், 2009
வெள்ளி, 25 டிசம்பர், 2009
செவ்வாய், 15 டிசம்பர், 2009
ஞாயிறு, 13 டிசம்பர், 2009
சனி, 12 டிசம்பர், 2009
வெள்ளி, 11 டிசம்பர், 2009
வியாழன், 10 டிசம்பர், 2009
புதன், 9 டிசம்பர், 2009
செவ்வாய், 8 டிசம்பர், 2009
திங்கள், 7 டிசம்பர், 2009
வியாழன், 3 டிசம்பர், 2009
புதன், 2 டிசம்பர், 2009
திங்கள், 30 நவம்பர், 2009
ஓம் எனும் ஆதி வார்த்தை!
ஓமெனும் ஒருவனே யாமென அறிந்தால்
தானெனச் சுருங்குமோ இருதயம்
இருதயத் தாமரை வீசும் ஓமெனும்
அருள்மணம் மூச்சினில் வாசி
ஓமெனும் அல்லா நிர்க்குணப் பிரம்மமே
நானென வந்த சகுணம்
சகுணம் அகமாய் நிர்க்குணம் ஓமாய்
குருமெய்ப் போதமாய் நீ
நீயெனும் உருவில் ஓமெனும் அருவம்
ஓங்கிடும் வழியே நான்
இருதய ஒருமை காண(Global Coherence Initiative)
இதைப் பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கி pdf கோப்பைத் தரவிறக்கிப் படிக்கவும், இருதயம் வெறும் இரத்த யந்திரம் அல்ல, பூமியும் உயிரற்ற ஜடப் பொருளல்ல(EARTH is an anagram for HEART). இருதய ஒருமையில் நீவிர் பழுக்க, திரு பூமியின் திருக்காட்சி உம் திரு விழியில் தெரியும். ஆழ்ந்து படிக்க வேண்டிய கட்டுரை.
ஆன்மீக செயல்பாட்டின் 12 நெறிகள்(12 Keys of Spiritual Activism)
1. எல்லா செயல்பாடுகளும் தயவை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
2. எல்லா உயிர்களுக்கும் இடையே இருக்கும் இணைப்பை உணரும் போது, தயவு பாய்கிறது.
3. தயவு என்பது அன்பின் விளக்கமாம் அருளின் இற(ர)க்கம், அறிவின் இயக்கம்.
4. கூட்டுறவான ஒருங்கிணைப்பினால், நல்லிசைவின் அரும்பெருக்கால், இலட்சியங்களை அடைய வேண்டும்.
5. ஆன்மீக செயல்பாடு என்பது எல்லோரின் நன்மைக்காகவும் சேவை புரிதலே அன்றித் தனி மனிதர்கள் மற்றும் குறிப்பிட்ட குழுக்களின் முன்னேற்றத்துக்கோ ஆதாயத்துக்கோ அல்ல.
6. உமது செயல்களில் நடத்தையில் ஒருமையும் நேர்மையும் கண்ணியமும் மிளிரட்டும்.
7. உம்மை எதிர்ப்பவரையும், உம் மீது சந்தேகப் படுபவரையும், தூற்றாதிருங்கள், பழியாதிருங்கள்.
8. இன்னொருவரை மேலே ஏற்றி விடுவதால், உம்மையும் நீர் மேலே ஏற்றிக் கொள்கிறீர்.
9. உமது மனத்தை விடுத்து, இருதய உந்துதல்களை உணரக் கற்றுக் கொள்வீர்.
10. நிலை நிற்கக் கூடிய ஆரோக்கியமாகச் செயல்படுத்த முடிந்த தீர்வுகளைத் தேடுங்கள்.
11. உமது செயல்கள் ஈட்டித் தரும் பலன்களால் மட்டுமே, உம்மை மதிப்பிடாதீர்கள்(பிரதி பலனை எதிர்பாராது உயிரின நலனுக்காக செயல்படுங்கள்)
12. உமது செயல்பாடுகளின் நோக்கம் அன்பு, தயவு, கருணையாக எப்போதும் இருக்கட்டும்.
நெறி 1
தயவே அடிப்படையாய் இயங்கு கடவுள்
வடிவாய்ப் படிப்படியாய் மாறு
நெறி 2
உயிர்கள் யாவும் ஓரினம் என்றே
உணர்ந்தால் பாயுந் தயவு
நெறி 3
அன்பின் விளக்கமாம் அருளின் இற(ர)க்கமே
அறிவின் இயக்கமாந் தயவு
அன்பு = இயல்பு(இருதய வங்கியின் வற்றா இருப்பு)
அறிவு = இயல்பின் உணர்வு = அன்பின் உணர்வு = அருள்
ஆற்றல் = அறிவின் இயக்கம் = அன்பை உணர்ந்த செயல்பாடு = தயவு
நெறி 4
"யாதும் ஊரே யாவருங் கேளிர்"எனக்
கூடிக் காண்போம் இலக்கு
அன்பின் அமர சூத்திரம் தந்த கணியன் பூங்குன்றனார்க்கு என் நெஞ்சார்ந்த நன்றி
நெறி 5
யாவின் நலம்நாடிச் செயல்படு தனிஆள்குழு
இலாபக் கணக்குகள் கைவிடு
நெறி 6
ஒருமை நேர்மை கண்ணியம் இம்மூன்றும்
ஒருங்கே மிளிர இயங்கு
நெறி 7
எதிர்ப்பும் ஐயமுஞ் சகித்துப் பழிகளை
உதிர்க்கும் வன்பைக் கைவிடு
நெறி 8
மற்றவரை மேலேற்றும் நற்செய்கை நிச்சயமாய்
நின்னையும் மேலேற்றும் அறி
நெறி 9
அலையும்மனப் பேய்விட்டு இருதய ஆழமெய்
உணர்வுள்ளே வேர்விட்டு இயங்கு
நெறி 10
நிலையாத பொய்தாண்டி நிலைநிற்கும் மெய்கண்டு
இறைமைக்கண் ஓங்கிக்காண் தீர்வு
நெறி 11
தன்னலங் கருதா தியங்கும் தயவே
இச்சகம் பேணும் நியதி
நெறி 12
இயக்கத்தின் நோக்கம் அன்புங் கருணையுந்
தயவுந்தான் ஐயமின் றறி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
